விஜய்யுடன் பூஜா ஹெக்டே 8 வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து “தளபதி 65” திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் விஜய்யும், பூஜா ஹெக்டேவும் 8 வருடங்களுக்கு முன்பு ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் முகமூடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்டதாகும். மேலும் பூஜா ஹெக்டே நடித்த முதல் தமிழ் படம் முகமூடி என்பது குறிப்பிடத்தக்கது.