தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மது பாட்டிலுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து ஆரத்தி எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின் படி தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானம் குடிக்க முடியாமல் ஏக்கத்தில் சுற்றித்திரிந்த மது பிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மாநில தலைவர் செல்லப்பாண்டியன், மாநில செயலாளர் ஆறுமுகம் போன்றோர் அந்த கடையின் முன்பு ஒரு மது பாட்டிலுக்கு பழம், தேங்காய், பாக்கு, வெற்றிலை போன்றவற்றை வைத்து ஆரத்தி எடுத்து உள்ளனர். அதன்பின் அவர்கள் மது பிரியர்களுக்கு முககவசம் வழங்கியுள்ளனர்.