Categories
உலக செய்திகள்

பூக்கள் ஏன் மலரவில்லை….? தோட்ட பணியாளர்களுக்கு தண்டனை…. வடகொரிய அதிபரின் அட்டூழியம்….!!

தேவையான நேரத்தில் பூக்கள் பூக்கவில்லை என கூறி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தோட்ட பணியாளர்களை வதை முகாமிற்கு அனுப்பி தண்டித்துள்ளார்.

வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஆவார். இவர் மக்களை கொடுமைப்படுத்துவது, மட்டுமல்லாமல் பிடிக்காதவர்களை கொள்வது, அண்டை நாடுகளை அச்சுறுத்துவது உள்ளிட்ட செயல்களை செய்வார். தற்போது  வடகொரியா நாட்டின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் தான் இருக்கின்றன. இந்நிலையில் வடகொரியா அதிபரின் தந்தை  கிம் ஜாங் பிறந்த நாள் பிப்ரவரி 16-ல் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த நாளன்று பொதுமக்கள் முன்னோடி தலைவர் என்பதால் மரியாதை செலுத்த வரவேண்டும்.

இந்த நாளுக்காக தந்தையின் பெயரில் உருவாக்கப்பட்ட மலரான கிம்ஜாங்கிலியா என்கிற பெகோனியா தாவர வகையைச் சேர்ந்த மலர்களை கொண்டு நிகழ்விடம் அலங்கரிக்கப் படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த பூக்கள் சரியான நேரத்திற்கு பூக்காததால் கோபமடைந்த அதிபர் கிங் ஜாங் உன், அங்கு பணிபுரிந்த தோட்ட பணியாளர்களை வதை முகாமிற்கு 6 மாதம் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தத் தோட்டத்திற்கு சம்சூ மாகாணத்தை சேர்ந்த ஹான் என்பவர் மேலாளராக உள்ளார். இதுகுறித்து தோட்ட பணியாளர்கள் கூறுவதாவது, கிம்ஜாங்கிலியா மலர்கள் மலர்வதற்கு தட்ப வெப்பநிலையும், ஈரப்பதமும் அவசியமானது.

மேலும் நாடு முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதால் மலர்ச்செடிகள் அமர்ந்திருக்கும் தோட்டங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் பூக்கள் சரியான நேரத்திற்கு மலரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை ஏற்காத அதிகாரிகள் தோட்ட பணியாளர்கள் தன் பணியை ஒழுங்காக செய்யாததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என முடிவு செய்து வதை முகாமிற்கு அனுப்பி வைதுள்ளனர். மேலும் முன்னாள் அதிபரின் தந்தை நினைவு நாளுக்கு மக்கள் யாரும் பொது இடத்தில் சிரிப்பது, மது அருந்துவது, மளிகை வாங்க வெளியே செல்லக்கூடாது என 11 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |