Categories
உலக செய்திகள்

இந்த முறையை பின்பற்றுங்க… “அதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது”… பெற்றோர்- மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரிட்டன் அரசு…!!

பிரிட்டனில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸினால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து  மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் Grant Shapps ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” பிரிட்டன் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல்  ஏற்படலாம். அந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக குழந்தைகள்  பள்ளிக்கு மிதிவண்டியில் செல்லலாம் அல்லது நடந்து செல்லலாம். இந்த செயலை மேற்கொள்ள நான் பெற்றோர்களையும் மாணவர்களையும் வலியுறுத்துகிறேன். மிதிவண்டி ஓட்டுவது அல்லது நடந்து செல்வது ஆரோக்கியமான ஒரு வழி. இது நாம் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதிப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |