Categories
உலக செய்திகள்

பூமியை கடக்கப்போகும் சிறுகோள்…. இதை விட 3 மடங்கு பெரியதாம்…. தகவல் வெளியிட்ட நாசா…!!

பூமியை வரும் 24 ஆம் தேதி நள்ளிரவில் சிறுகோள் ஒன்று கடக்கப்போவதாக நாசா தெரிவித்துள்ளது.

நமது பூமியானது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்றாகும். இந்த சூரிய குடும்பத்தில் கோள்கள் சுழன்று வருவதைப் போலவே சிறு கோள்களும் சுற்றி வருகின்றன. இவைகள் கோள்களின் உருவாக்கத்தின் போது உடைந்த சிறு பகுதிகளாகும். அந்த மாதிரி ஒரு சிறு கோளானது  பூமியை கடக்க உள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறு கோளுக்கு “2008 Go20” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சிறு கோளானது மணிக்கு 1800 மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் வரும்  24 ஆம் தேதியன்று இந்தியநாட்டு நேரத்தில் இரவு ஒரு மணி அளவில் பூமியை கடக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிறுகோளின் நகர்வை நாசா தொடர்ந்து கண்காணித்து வருவருவதாக தெரிவித்துள்ளது. இந்த சிறுகோளின் நகர்வினால் பூமிக்கு எந்தவித சேதமுமில்லை என்று நாசா கூறியுள்ளது. மேலும் குறிப்பாக இந்த சிறு கோளானது தாஜ்மஹால் போன்று மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.

Categories

Tech |