Categories
உலக செய்திகள்

‘பூமி இனிமேல் கண்காணிக்கப்படும்’…. வெளியிடப்படும் தெளிவான புகைப்படங்கள்…. சீனா விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்….!!

பூமியின் பாதுகாப்பு குறித்து கண்காணிப்பதற்காக சீனா செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது.

சீனா ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து ஜிலின்-1 காஒபென்-02F செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோளானது Kuaizhou-1 என்னும் பெயர் கொண்ட ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செயற்கைக்கோளானது பூமியின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அதிலும் இந்த செயற்கைக்கோள் ஆனது பூமியின் பாதுகாப்பு குறித்து அதிக தெளிவுத்தன்மையுள்ள புகைப்படங்களை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல்களை அதிவேகத்தில் அனுப்பக்கூடிய பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |