பூனைகளின் மீது ஆர்வம் கொண்ட மேனகா காந்தி அவற்றிற்காக புலியாக சீறினார்.
விலங்குகளின் நலனில் ஆர்வம் கொண்ட மேனகா காந்தி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் “பூனைகள் கொரோனா வைரஸ் தொற்றினை பரப்பாது என்று தெரிவித்திருந்தார். மேலும் பூனை ஒருபோதும் புலி ஆகாது என்றும் அதற்கும், இதற்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியுள்ளார்.
நீங்கள் வளர்க்கும் பூனைகள் மிகவும் பாதுகாப்பானவை எனவும் கூறியுள்ளார். அமெரிக்கா நாட்டிலுள்ள ஒரு வன உயிரியல் பூங்காவில் இருக்கும் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என தெரியவந்தது. இது தொடர்பாக உலகில் இருக்கும் அனைத்து வனவிலங்குகள் சரணாலயத்திற்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் நாம் வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு உண்டாகும் என்று வதந்திகள் வெளியானது, இப்பொழுது அது நினைவு கூறத்தக்கது. உலக நாடுகளை அச்சுறுத்தும் இந்த கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் எட்டியுள்ளது. உயிரிழப்பு 70 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்தியாவில் மட்டும் தற்போது வரை கொரோனா தொற்று பாதிப்பு ஐந்தாயிரத்தையும் கடந்து விட்டது.
— Maneka Sanjay Gandhi (@Manekagandhibjp) April 7, 2020