திருவள்ளூரை அடுத்துள்ள பூண்டி ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்தத் தடுப்பூசி முகாமிற்கு , திமுக பூண்டி ஒன்றிய செயலாளரான கிறிஸ்டி என்கிற அன்பரசு தலைமை தாங்கினார். இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டார்.
அதன்பிறகு அங்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த, முன்களப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை மற்றும் காய்கறி பொருட்களை அவர் வழங்கினார்.அப்போது ராமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 7 ம் வகுப்பு படிக்கும் யஸ்வந்த் என்ற 12 வயது சிறுவன், புதிய சைக்கிள் வாங்குவதற்காக , அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் 2 , 500 -ஐ எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனிடம் கொரோனா நிதியாக வழங்கினார்.