தேவையான பொருட்கள்
- சாதம் – 4 கப்
- பூண்டு – 2 கப்
- சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
- இஞ்சி – 2 துண்டு
- கடுகு – 1 டீஸ்பூன்
- மிளகாய் – 8
- உள்ளி – 1 கப்
- மிளகு பொடி – 4 டீஸ்பூன்
- நெய் – 4 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் உள்ளி, இஞ்சி, பூண்டு மூன்றையும் தோலை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அதனுடன் தோலுரித்து வைத்துள்ள புளி, பூண்டு, இஞ்சி இவற்றை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
வதக்கும் பொழுது மிளகு போடி மற்றும் சீரகப் பொடி சேர்த்து நன்றாக கிளறி இறக்கிவிடவும்.
இப்போது இந்தக் கலவையில் எடுத்து வைத்துள்ள சாதத்தை போட்டு தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக கிளறவும்.
இறுதியாக பூண்டு சாதம் தயார்.