பூங்காவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரின் புகைப்படத்தை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்
லண்டனில் எட்ஜ்வேரில் உள்ள வாட்லிங் பூங்காவில் கடந்த 28 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு 50 வயது பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பூங்காவில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். அதில் அந்த நபரின் புகைப்படத்தை போலீசார் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.
மேலும் அந்த நபர் கருமையான தலைமுடி மற்றும் பச்சை நிற உடை அணிந்து சம்பவம் நடந்த இரவு அன்று பர்ன்ட் ஓக் டியூப் நிலையம் வழியாக நிறைய கை பைகளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரையும் போலீசார் கைது செய்யவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து ஏதேனும் அறிந்தாவர்கள் முன் வந்து சாட்சி கூறுமாறு போலீசார் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த வழக்கு விசாரணையை சிறப்பு அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.