Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

‘சர்க்கரை டப்பாவை தூக்கிச் சென்ற கரடி’…. பீதியில் உள்ள மக்கள்….!!

பூங்காவிற்குள் கரடி நுழைந்ததால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.

நீலகிரியில் உள்ள குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை போன்ற விலங்குகள் அதிகளவில் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. அவைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் நேற்று நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்துள்ளது. மேலும் பூங்கா வளாகத்தில் சுற்றி திரிந்த கரடி தோட்டக்கலைத் துறையினர் தங்கும் விடுதியின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது. இதனை அடுத்து விடுதியில் உள்ள சமையலறையில் இருந்த சர்க்கரையை கரடி தின்று தீர்த்ததோடு அங்குள்ள பொருட்களையும் கொட்டி வீணாக்கியுள்ளது.

குறிப்பாக அங்கிருந்த சர்க்கரை டப்பாவையும் தூக்கிச் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கரடியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |