டெல்லியில் 71 ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது அந்த விழாவில் ஒரு அங்கமாக உத்தரபிரதேசம் ஆந்திரா தெலுங்கானா தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் சார்பாக அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகள் அணிவகுத்து வரவிருக்கின்றன.
அந்த அணிவகுப்பு ஒத்திகை இரண்டு தினங்களாக நடந்தது அதனில் தமிழ் நாட்டின் சார்பாக அணிவகுப்பில் தமிழர் காவல் தெய்வம் அய்யனார் சிலை வைக்கப்பட்டுள்ளது 17 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அந்த சிலை அவருக்கு முன்னாள் குதிரையும் காவலாளிகளும் இருப்பதாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த சிலை பூணூல் அணிவித்து இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. அய்யனார் எந்த காலத்தில் பூணூல் அணிந்திருந்தார் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அந்த கேள்விகளுக்கு விமர்சனங்களுக்கும் பதில் அளித்த சிலை வடிவமைப்பாளர் டில்லிபாபு இரண்டு கைகளுடன் கூடிய அய்யனார் என்றால் பூணூல் இருக்காது என்றும் ஆனால் இந்த ஐயனார் சிவனுடைய மற்றொரு அம்சம் என்பதின் பொருளாக பூணூல் அணிவித்து இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.