சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனை உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு முன் களப்பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையை சார்ந்தவர்களும் தப்பவில்லை. மருத்துவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது நம்மக்கு நன்றாகவே தெரியும் தற்போது.
இந்தநிலையில் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் உதவியாளர் ஒருவர் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.பூந்தமல்லி நகராட்சி அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்த நிலையில் அந்த மருத்துவமனை தற்போது மூடபட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அரசு மருத்துமனையில் பணிபுரியும் உதவியாளர்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.