Categories
அரசியல்

தீபாவளிக்கு பூந்திலட்டு செஞ்சு அசத்துங்க…. ரெசிபி இதோ உங்களுக்காக….!!!!

பூந்தி லட்டு செய்ய தேவையான பொருள்கள்:

கடலைமாவு – 2 கப்

மஞ்சள் நிறம்  – 1  சிட்டிகை

பேக்கிங் சோடா – 1  சிட்டிகை

எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு

சர்க்கரை –  1.5 கப்

தண்ணீர் –  1 கப்

ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி

முந்திரி  – 10

காய்ந்த திராட்சை  – 10 -15

நெய் –  1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2  கப் கடலைமாவு சேர்க்க வேண்டும். அதன்பின் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். பிறகு 1 சிட்டிகை மஞ்சள் நிறம் சேர்த்து கலக்க வேண்டும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். கட்டிகள் இல்லாமல் மென்மையாக கரைத்துக்கொள்ள வேண்டும். பூந்தி செய்வதற்கு வாணலியில் எண்ணெயை சூடாக்க வேண்டும். ஒரு பூந்தி கரண்டி அல்லது ஜல்லி கரண்டியில் சிறிது சிறிதாக மாவை போட்டு தேய்க்க வேண்டும். மாவு முத்து முத்தாக எண்ணெயில் விழுவதை காண முடியும்.

இதனையடுத்து 20 முதல் 30 வினாடிகளுக்கு பிறகு எண்ணெயை வடித்து விட்டு எடுக்க வேண்டும். குறிப்பாக 1 முறை  பூந்தி போட்ட பிறகு கரண்டியை கழுவி விட்டு துணியால் நன்கு துடைத்து விடவும். எல்லா மாவிலும் பூந்தி செய்து ஒரு கிச்சன் பேப்பரில் வைத்து எண்ணெயை வடித்துவிட வேண்டும். இதனை அடுத்து ஒரு பாத்திரத்தில் 1.5 கப் சர்க்கரை சேர்க்கவும். 1 கப் தண்ணீர் சேர்த்து 5 -8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதனுடன் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை 1 கம்பி பதம் வரும் வரை சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். இப்பொழுது  பூந்தி சேர்த்து கிளற வேண்டும். 1 கப் பூந்தியை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து  கொள்ள வேண்டும்.

அதனை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய வாணலியில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இதனைதொடர்ந்து வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையை  பூந்தி உடன் சேர்த்து கலக்க வேண்டும். இதனை இடித்து வைத்துள்ள பூந்தியை பூந்தி கலவையுடன் சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் நன்கு கலந்து 10 நிமிடங்களுக்கு ஆற விட வேண்டும். ஓரளவு ஆறிய பிறகு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். இப்போது சுவையான பூந்தி லட்டு தயாராகிவிட்டது.

Categories

Tech |