Categories
உலக செய்திகள்

1% மக்களுக்கு கூட தடுப்பூசி செலுத்தவில்லை.. ஏழை நாடுகளின் நிலை..!!

உலகிலுள்ள ஏழ்மையான நாடுகளில் தற்போது வரை ஒரு சதவீதத்திற்கும் குறைந்த மக்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன்  ஆகிய வளர்ந்த நாடுகள் தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கி இருக்கும் ஏழ்மையான நாடுகள் தடுப்பூசி திட்டத்தில் பின்தங்கியிருக்கின்றன.

சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில், உலக அளவில் 10.4% மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதில் ஏழ்மையான நாடுகளில் 0.9% மக்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகள், தடுப்பூசி செலுத்துவதிலும்  இருக்கிறது.

இந்த நிலையை மாற்றுவதற்காக, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகள் சேர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக அளிக்க தீர்மானித்துள்ளன. எனவே விரைவாக அனுப்பினால் தான் உயிர்பலிகளை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |