Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் ஏற்படும் துயரம்”… பட்டினி கிடந்து பிள்ளைகளை காப்பாற்றும் தம்பதி!

கொரோனா தொற்று ஊரடங்கால் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர்கள் பட்டினி கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்க போராடி வருகின்றனர். இதுகுறித்து தெற்கு லண்டனை சேர்ந்த அமி ஸ்மித், மார்க்கஸ் தம்பதியினர் கூறும் பொழுது எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க நாங்கள் பட்டினி கிடக்கிறோம்.

குழந்தைகளுக்கு தேவையானஉணவாய் கொடுக்க முடியாமால் தினமும் பாடுபடுகிறோம். ஒரு வாரத்திற்கு 30 பவுண்டுகள் பட்ஜெட்டில் குடும்பம் நடக்கிறது. குழந்தைகளுக்கான உணவு வவுச்சர்கள் இருந்தாலும் அதனை பயன்படுத்த எங்கோ இருக்கும் அங்காடிகளை தேடி செல்ல வேண்டியுள்ளது. வீட்டிலிருந்த காரும் பழுதடைந்து போனதால் உள்ளூரில் இருக்கும் கடைகளை நம்பி இருக்கிறோம். ஆனால் உள்ளூர் கடைகள் கொரோனா தொற்று பிரச்சினையை காரணமாக காட்டி பொருட்களுக்கு அதிக விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

இத்தம்பதியினர் குழந்தைகளின் உணவு வவுச்சர்களையும் உள்ளூர் பள்ளிகள் கொடுக்கும் உணவுப் பொட்டலங்களையும் நம்பி இருக்கிறார்கள். ஒருபுறம் குழந்தைகளின் உணவு வகைகளை நம்பி வாழும் சில குடும்பங்கள். இன்னொருபுறம் குழந்தைகள் இல்லாத குடும்பங்கள் உணவு வங்கிகளை தேடி செல்கின்றனர். உணவு வங்கி தொண்டு நிறுவன ஊழியர் கூறும்பொழுது “புதுப்புது முகங்களை தினமும் பார்க்கிறோம். உணவு வங்கிகளுக்கு வருவதை விரும்பாதவர்களும். உணவு வங்கி பக்கமே இதற்குமுன் வராதவர்களும் இப்போது உணவு வங்கியில் வந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

தேனீர் கடை வைத்திருப்பவர்கள், சிறுதொழில் செய்பவர்கள், முடிதிருத்துபவர்கள் என பலதரப்பட்டவர்கள் உணவு வங்கிகளையே நம்பி இருக்கின்றனர். இதனிடையே அமி ஸ்மித் மார்க்கஸ் தம்பதியினர் கூறும் பொழுது “பிள்ளைகளுக்கு எப்படியோ உணவு ஏற்பாடு செய்து விட்டோம். ஆனால் வேலைக்கு போகும் வரை எதிர்காலத்தில் என்ன செய்வது என்று கவலை இருப்பதாக கவலை இருந்து வருகிறது. சில சமயங்களில் வீட்டில் பீன்ஸ் மட்டும் டோஸ்ட் மட்டுமே இருக்கும் ஆனால் இது கூட இல்லாத குடும்பங்களை எண்ணி எங்களிடம் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்” எனக் கூறினார்.

Categories

Tech |