Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உணவின்றி தவிக்கும் ஏழை மக்கள்…. உதவும் பிரபல நடிகை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

உணவின்றி தவித்தவர்களுக்கு பிரபல நடிகை உதவி செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பலபேர் பொருளாதார ரீதியாகவும் சிரமத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று இவர் மும்பையில் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிய பிரபல நடிகை

இதுகுறித்து ஜாக்லின் கூறியதாவது, “பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் அமைதி தொடங்குகிறது என்று அன்னை தெரசா கூறியுள்ளார். அதன்படி கொரோனாவை எதிர்கொள்ளும் இந்த கடினமான காலத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை நான் கவுரவமாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த நற்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Categories

Tech |