நாசா செல்ல இருக்கும் ஏழை மாணவி ஒருவர் தனது பொதுநலத்திற்காக மக்களின் பரட்டை பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் மாணவி ஜெயலட்சுமி(16). இவர் ஏழ்மையான குடும்பத்தில் சார்ந்தவர் என்பதால் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் சர்வதேச தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவி ஜெயலட்சுமி காலையில் தன் வீட்டு வேலையை முடித்துவிட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். பள்ளி முடிந்த பிறகு கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
தற்போது கொரோனா காரணமாக வேலையை தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது 12ஆம் வகுப்பு படிக்கும் இவர் நாசா செல்ல தயாராக இருக்கிறார். எனவே அவருக்கு நாசா செல்ல தேவைப்படும் பணத்திற்காக பலரும் உதவி செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கிராமாலயா என்ற தொண்டு நிறுவனம் மாணவியை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேட்குமாறு கூறியுள்ளது.
அதற்கு அந்த மாணவி ஜெயலட்சுமி தன்னைப் பற்றியோ, தன்னுடைய குடும்பத்தை பற்றியும் சிந்திக்காமல் தனது கிராமத்தை பற்றி நினைத்து தங்கள் பகுதியில் இருக்கும் 126 வீடுகளுக்கு கழிப்பறை கட்டித் தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஜெயலட்சுமி குடியிருக்கும் பகுதியில் உள்ள வீடுகளுக்கு 20 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டித் தரப்பட்டது. இதையடுத்து சிறுவயதிலேயே பொதுநலத்தில் அக்கறை கொண்ட அந்த சிறுமிக்கு ஊர் மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.