பூசாரி உட்பட பக்தர்களை காவல்துறையினர் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதனை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆபத்தை சற்றும் உணராமல் தமிழகத்தின் ஒரு கிராமப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் மக்களை அழைத்துக் கொண்டு கோயிலை திறந்து பூஜை நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அனைவரையும் கோவிலை விட்டு வெளியேறக் கோரி லத்தியால் பூசாரி பக்தர்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கினர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.