பூட்டிய வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூத்தங்குழி பகுதியில் சாந்தகுரூஸ் நெப்போலியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆன்றோ அருள்லூசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியூர் நகரில் இடம் வாங்கி புது வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது சாந்தகுரூஸ் நெப்போலியன் வெளிநாட்டில் இருப்பதால் அவரது மனைவியான ஆன்றோ அருள்லூசியா தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு ஆன்றோ அருள்லூசியா தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆன்றோ அருள்லூசியாவின் வீடு திறந்து கிடந்ததை பால்காரர் பார்த்துள்ளார். இதனையடுத்து பால்காரர் ஆன்றோ அருள்லூசியாவிற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி ஆன்றோ அருள்லூசியா தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனையடுத்து ஆன்றோ லூசியா தனது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆன்றோ ஆறுள்லூசியா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் ஆன்றோ அருள்லூசியா வீட்டில் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, 2 செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் திருடிச் சென்ற பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் கொள்ளை தொடர்பாக துப்பு கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாய் ரிக்கி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரம் அது வீட்டில் நடந்து அதன்பின் நின்று விட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வள்ளியூர் காவல்துறையினர் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.