பூவே பூச்சூடவா சீரியல் பிரபலங்கள் ரேஷ்மா- மதன் பாண்டியன் தங்களின் காதல் திருமணத்தை உறுதி செய்துள்ளனர் .
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பூவே பூச்சூடவா’ . இந்த சீரியலில் ரேஷ்மா முரளிதரன், மதன் பாண்டியன் ,கார்த்திக் வாசுதேவன், தினேஷ் கோபால்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் . இதில் ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியன் இருவரும் தங்கள் காதல் திருமணத்தை புத்தாண்டு தினத்தில் உறுதி செய்துள்ளனர் . இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இந்த ஆண்டு எங்களுக்கு ஸ்பெஷலானது .
புத்தாண்டில் இதை அறிவிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் திருமண பந்தத்தில் இணைய உள்ளோம் . உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுப்பதற்காக இவர்கள் திருமண செய்தியை புத்தாண்டில் அறிவித்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து இந்த ஜோடிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .