போப் ஆண்டவரின் சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவுத் துறை மந்திரி கார்டினல் பீட்ரோ பரோலின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பியாவின் மால்டோ நாட்டிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கு மூட்டு வலி இருக்கிறது. இதனால் போப் ஆண்டவரை தேவையற்ற சிரமத்துக்கு உள்ளாக வேண்டாமென்று சக்கர நாற்காலி லிப்டை பயன்படுத்தி விமானத்தில் ஏறி சென்றுள்ளதாக வாடிகன் பத்திரிக்கை நிபுணர் மேட்டியோ புருனி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து போப் ஆண்டவரின் சுற்றுப் பயணம் குறித்து வாடிகன் வெளியுறவு மந்திரி கார்டினல் பீட்ரோ பரோலின் கூறியதாவது. “இவரின் இந்த பயணத்தில் செயல் திட்டத்தில் அகதிகள் விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் நாட்டின் அகதிகளை ஏற்பது உண்மையிலேயே போற்றுவதற்குரியது” என்று கூறியுள்ளார்.