Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்துவது தார்மீக கடமை…. போப் பிரான்சிஸ் அறிவுரை….!!

போப் பிரான்சிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒரு தார்மீக கடமை என்று கூறியிருக்கிறார்.

கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தின் தலைவர் போப் பிரான்சிஸ், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை, “அன்பின் செயல்” என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பது, “தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்” என்றும் கூறியிருந்தார். தற்போது, அதையும் தாண்டி, “தடுப்பூசி செலுத்துவது, ஒரு தார்மீக கடமை” என்று கூறியிருக்கிறார்.

இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, தனிநபர்களுக்கு தங்களை காத்துக்கொள்ளக் கூடிய பொறுப்பு இருக்கிறது. இது நம்மைச் சுற்றியிருக்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் மரியாதை தரும். சுகாதார பாதுகாப்பு, என்பது ஒரு தார்மீக கடமை என்று கூறியிருக்கிறார்.

மேலும், ஆதாரமில்லாத கருத்துக்களை வைத்துக்கொண்டு மக்களை தடுப்பூசி செலுத்துவதிலிருந்து தடுத்து வருபவர்களையும் விமர்சித்திருக்கிறார். தடுப்பூசிகள், தொற்றிலிருந்து குணப்படுத்தும் ஒரு மாயாஜால வழிமுறை கிடையாது. எனினும், அதனை தடுப்பதற்கு மிக நியாயமான தீர்வை வழங்குகிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |