Categories
உலக செய்திகள்

1000 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு.. போப் மன்னிப்பு கேட்க வேண்டும்.. கனடா பிரதமர் கோரிக்கை..!!

கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், போப் ஆண்டவர்  கனடாவிற்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜஸ்டின் ட்ருடோ கூறியிருக்கிறார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பூர்வக்குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் கடந்த மாதத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்து சுமார் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, Saskatchewan என்ற மாகாணத்திலும் கடந்த வியாழக்கிழமை அன்று மேரிவல் ரெசிடென்ஷியல் பள்ளியிலிருந்தும், சுமார் 751 குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை The First Nations என்ற கனடாவின் பூர்வகுடி அமைப்பு உறுதிப்படுத்தியது. இதனால் ஏறக்குறைய சுமார் 1000 பூர்வகுடியின குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

எனவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இந்த பள்ளிகளை நடத்துகின்ற, கத்தோலிக்க திருச்சபை சார்பில், புனித போப் பிரான்சிஸ் கனடா நாட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி கனடா மண்ணில் இருக்கும் பூர்வகுடியின மக்களிடமும் மன்னிப்பு கோருவது எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அவரிடம் தனிப்பட்ட முறையில் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |