போப்பாண்டவரை சந்தித்த பிரதமர் மோடி அவருடன் நீண்ட நேரம் உரையாற்றினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தாலியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக ரோமுக்கு சென்றார். அவர் அங்குள்ள வாடிகன் சிட்டியில் போப் பிரான்ஸிஸை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. மேலும் பிரதமர் மோடி போப் பிரான்சிஸ்ஸை இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய பிரதமர்கள் போப் ஆண்டவரை சந்தித்துள்ளனர்.
அதில் முதலாவதாக 1955 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோவாவை இந்தியாவுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தில் 20 பேர் பலியாகினர். இதன் காரணமாக இந்திய பிரதமர் நேரு கோவா மீது பொருளாதார தடையை விதித்தார். இது தொடர்பாக போப்புடன் நேரு சந்திப்பை மேற்கொண்ட போது ‘இங்கு நடப்பது ஒரு அரசியல் பிரச்சனை தான் என்றும் மத பிரச்சனை அல்ல’ என தெளிவுபடுத்தினார். இதனை தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி இரண்டாவது போப்பான ஜான்பாலை சந்தித்து பேசினார்.
இதற்கு பிறகு இந்திய பிரதமர்களான ஐ.கே.குஜ்ரால் 1997ஆம் ஆண்டும் அடல் பிகாரி வாஜ்பாய் 2000 ஆம் ஆண்டிலும் அப்போது இருந்த போப்பை சந்தித்து பேசியுள்ளார்கள். மேலும் 1964 ஆம் ஆண்டு நற்கருணை மாநாட்டில் பங்கேற்பதற்காக போப் ஜான் பால் இந்தியாவிற்கு முதன்முறையாக வருகைபுரிந்தார். அதிலும் 1986 ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் 1999 ஆம் ஆண்டு நவம்பரிலும் இரண்டாம் ஜான் பால் இந்தியாவிற்கு வருகை தந்த போது விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.