கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் மாநாடு தொடர்பாக போப் பிரான்ஸிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் தொடர்பான cop26 என்றழைக்கப்படுகின்ற உச்சிமாநாடானது வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி துவங்கி நவம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற பல்வேறு முக்கிய உலக தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை உலக நாடுகளின் தலைவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய தகவல்களை இங்கிலாந்தின் பிரபல வானொலி நிறுவனம் ஒன்று ஒலிப்பதிவு செய்து அதனை வெளியிட்டுள்ளது. அதில் “காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் இயற்கை பேரிடரை தடுத்து நிறுத்துவதில் நமது அனைவரின் கூட்டு முயற்சிமட்டுமின்றி ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பும் அவசியம். குறிப்பாக கடினமான சூழ்நிலையில் தான் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இருப்பினும் இதன் மூலம் நடக்க வேண்டிய அனைத்து பணிகளும் அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.