உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் பற்றி பேசிய போது போப் பிரான்சிஸ் கண் கலங்கி அழுதது, காண்போரை கலங்கச் செய்துள்ளது.
இத்தாலியின் தலைநகரான ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நாட்டு மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதன்பின், மக்கள் முன்னிலையில் உரை நடத்தியிருக்கிறார். அதற்கு பிறகு, உக்ரைனியர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் பற்றி பேசினார்.
திடீரென்று அமைதியான அவர், கண்ணீர் விட்டு அழுது விட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் பேச்சை தொடர்ந்தார். “மாசற்ற கன்னியே, மக்களின் நிலைமையை இன்று நான் உங்களிடம் சென்று சேர்க்க நினைத்தேன். அந்நாட்டு மக்கள் அமைதி பெற இறைவனிடம் கேட்கிறோம். இப்போது இந்த தியாக பூமியின் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவருமே துயரத்தில் வாடுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நான் உங்கள் முன் வைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.