கனடா நாட்டிற்கு சுற்றுப்பயணமாக சென்றிருக்கும் போப் பிரான்சிஸ் அங்கிருக்கும் பூர்வ குடியின குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
போப் பிரான்சிஸ் கனடா நாட்டிற்கு சென்றார். அப்போது அங்கு இருக்கும் அல்பேடா என்னும் பகுதியின் கிறிஸ்தவ பள்ளிகள் உள்ள இடத்திற்கு சென்றபோது அவர் தெரிவித்ததாவது, ரோமன் கத்தோலிக்க பள்ளிகளில் கல்வி கற்ற பூர்வ குடியின குழந்தைகள் மீது வன்கொடுமைகள் நடந்ததற்கு மன்னிப்பு கூறினார்.
மேலும், அவர் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் முன்பே, கொடும்செயல்களுக்கு மன்னிப்பு கோரும் யாத்திரை தான் இது என்று தெரிவித்திருந்தார். இது மட்டுமல்லாமல், இந்த பயணத்தின் முதல் படி மன்னிப்பு கேட்பது தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.