ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து போப் பிரான்சிஸ் வெளியிட்டுள்ள கருத்தால் அனைவரிடமும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து போப் பிரான்சிஸ் வானொலி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அமெரிக்கா படைகள் வாபஸ் பெற்றதை அடுத்து அங்கு உருவாகியுள்ள புதிய அரசியல் நிலைமை குறித்து போப் பிரான்சிஸிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதில் “அடுத்தவர்களின் மீது தங்களின் சொந்த கருத்துகளை வலுக்கட்டாயமாக திணிப்பது ஒரு பொறுப்பற்ற கொள்கை. மேலும் வரலாறு, இனம், மதம், மொழி போன்ற பிரச்சினைகளை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அனைத்து மக்களின் மரபுகளையும் புறக்கணித்துவிட்டு ஜனநாயகத்தை கட்டியிழுக்க முயற்சி செய்கின்றனர்.
இவற்றை நிறுத்துதல் மிகவும் அவசியம்” என்று ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையிலேயே இந்த சொற்களை ஏஞ்சலா மெர்கல் கூறவில்லை. மேலும் கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று ஏஞ்சலா மெர்க்கல் முன்னிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். இந்த நிலையில் போப் பிரான்சிஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறிய கருத்தை ஏஞ்சலா மெர்கல் கூறியதாக தெரிவித்தது அனைவரிடமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.