Categories
உலக செய்திகள்

3 தோட்டாக்கள் அடங்கிய கடிதம்…. போப் பிரான்சிஸ்க்கு கொலை மிரட்டல்…. தகவல் வெளியிட்ட இத்தாலிய காவல்துறை….!!

போப் பிரான்சிஸ்க்கு வந்த கொலை மிரட்டல் குறித்து இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்டிகனில் உள்ள போப் பிரான்சிஸ்க்கு கொலை மிரட்டல் கடித உறை ஒன்று வந்துள்ளது. அதில் மூன்று தோட்டாக்களும் ஒரு கடிதமும் உள்ளதாக மிலனில் இருக்கும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கடிதமானது பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இத்தாலிய காவல்துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்த மூன்று தோட்டாக்களும் ஒரு கைத்துப்பாக்கிகானதாகும்.

மேலும் இந்த கடிதத்தில் வாட்டிகனின் நிதி செயல்பாடுகளை குறித்து எழுதப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக எந்தவித தகவலையும் வாட்டிகன் நிர்வாகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |