கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளார்.
பிரபல மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கமல்ஹாசனின் தாத்தாவாக “பம்மல் கே சம்பந்தம்” படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் 98 வயதான உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா நோயிலிருந்து பூரணமாக குணமடைந்து தற்போது நலமாக உள்ளார் என இவரது மகனான பவதாசன் கூறியுள்ளார். இந்த வயதிலும் பூரண உடல் நலத்தோடு நோயிலிருந்து விடுபட்டதால் இவரது ரசிகர்கள் மற்றும் பிற பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.