Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மரணம்….அதிர்ச்சியில் திரைத்துறை…!!!

முன்னாள் எம்.பி_ யும், பிரபல நடிகருமான ஜே கே ரித்தீஷ் மாரடைப்பால் தற்போது மரணமடைந்துள்ளார்.

இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

Image result for ரித்தீஷ்

46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷ் வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உடனே அருகிலுள்ள கோணிக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். ரித்தீஷின் உடல் ராமநாதபுரத்திற்கு அருகே உள்ள அண்ணாநகரில் வைக்கப்பட்டுள்ள்ளது. இவரது இறப்பிற்கு நடிகர் நாசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |