பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 6 வருடங்களாக பிரபல நடிகர் ரன்பீர் சிங்கை காதலித்த தீபிகா படுகோனே கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபிகா படுகோனேவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் ரன்பீர் சிங்குக்கும் தீபிகா படுகோனே விற்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஒரு தகவல் காட்டுதீ போல் பரவி வருகிறது.
கடந்த 2 மாதங்களாகவே தீபிகாவும், ரன்பீரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், தீபிகா ரன்பீரை விட அதிக அளவில் சம்பாதிப்பதால் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு சமீபத்தில் ரன்பீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் வெளியாகி சர்ச்சையான போது தீபிகா படுகோனேவும் சேர்ந்து விமர்சிக்கப்பட்டார். இது பிரிவுக்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் ரன்பீரும், தீபிகாவும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இருவர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.