Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவு… திரையுலகினர் அதிர்ச்சி.!!  

‘தவசி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. இவர் 1983 ஆம் ஆண்டு நடிப்பதற்காக சென்னை வந்து, புரொடக்‌ஷன் மேனேஜராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அவருக்கு  கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்தி பல படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றினார். அதுமட்டுமில்லாமல் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அசத்தினார். அவர்  தவசி, எல்லாம் அவன் செயல், நான் கடவுள், வேல், இங்கிலிஷ்காரன், நண்பன் ரோஜாக்கூட்டம்   உட்பட பல படங்களில் நடித்து மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

Image result for கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.

குறிப்பாக அவர் நடித்த காமெடியில் பெஸ்ட் காமெடியாக தவசி படத்தில் நடிகர் வடிவேலுவிடம் எக்ஸ்க்யூஸ் மீ சாரி பார் த டிஸ்டெர்ஃபெண்ட்ஸ் இந்த  அட்ரஸ் தெரியுமா? என்று கேட்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த காமெடி இன்றளவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடித்த காமெடி காட்சிகள் பெரிதும் ரசிக்கப் பட்டுள்ளன.

Image result for கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் குமுளி அருகே  படப்பிடிப்பின் போது   கிருஷ்ணமூர்த்திக்கு  இன்று அதிகாலை 4: 30 மணி அளவில் திடீரென்று மாரடைப்பு  ஏற்பட்டது. உடனடியாக அவரை படக்குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது. மறைந்த கிருஷ்ணமூர்த்திக்கு  மனைவி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மறைவை கேட்டு திரையுலகினர் அதிர்ச்சியடைந்து,  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Categories

Tech |