சென்னை அருகே தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து நடிகர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நாங்களும் நல்லவங்க தான்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் விஜய் ஹரிஷ். இவர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் சமயத்திலேயே காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
கைதிற்கான காரணமாக கூறப்படுவதாவது, சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மாணவி அளித்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.