Categories
சினிமா

எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடாவில் இணைந்த பிரபல தாஜ்மஹால் பட நடிகை….. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைப்பயணத்தை முடித்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் பாதூர் என்ற பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அப்போது பிரபல பாலிவுட் நடிகை ரியாசென் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டார். நடிகை ரியாசென் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் மற்றும் பிரசாந்த் நடித்த குட்லக் போன்ற திரைப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகை ரியாசென் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |