Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா’ உரிமையை கைப்பற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்…. வெளியான புதிய தகவல்….!!!

ஆர்யாவின் சார்பட்டா திரைப்படத்தின் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் படக்குழுவினரை நடிகர் கமலஹாசன் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை கூறினார்.

இந்நிலையில் சார்பட்டா திரைப்படத்தை எந்த தொலைக்காட்சி நிறுவனம் வாங்க இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல கலைஞர் டிவி சார்பட்டா திரைப்படத்தின் உரிமையை கைப்பற்றப் போவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |