ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ”சார்பட்டா பரம்பரை” படம் அமேசான் ப்ரைம் OTT யில் வெளியானது. இந்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ், காலா போன்ற படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தான் இயக்கினார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தீபாவளியன்று பிரபல தொலைக்காட்சிகளில் நிறைய புதிய படங்கள் ஒளிபரப்பு செய்வார்கள். அந்த வகையில், தீபாவளியன்று கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு ”சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ரசிகர்கள் இந்த திரைப்படத்தை காண்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.