Categories
உலக செய்திகள்

2035-ல் இந்தியாவில் 67 கோடியாக உயரும் நகர்ப்புற மக்கள் தொகை…. ஐ.நா வெளியிட்ட ஆய்வறிக்கை…!!!

ஐநா ஆய்வு அறிக்கையில் வரும் 2035-ஆம் வருடத்தில் இந்தியாவின் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 67.5 கோடியை நெருங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஐ.நாவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வரும் 2035 ஆம் வருடத்திற்குள் நகர்ப்புற மக்கள் தொகை எண்ணிக்கையில் 100 கோடியுடன் சீனா முதலிடத்தை பிடிக்கும். மேலும், 67.5 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கும். அதன்படி வரும் 2050 ஆம் வருடத்திற்குள் உலக அளவில் நகர்புற மக்கள் தொகை எண்ணிக்கையானது 220 கோடியாக உயரும்.

2020 ஆம் வருடப்படி இந்திய நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகை எண்ணிக்கையானது, 48,30,99,000 -ஆக இருந்தது. ஆனால் வரும் 2025 ஆம் வருடத்தில் 54,27, 43,000- ஆக அதிகரிக்கும் என்றும் 2030 ஆம் வருடத்தில் 60, 73,42,000- ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் 2035 ஆம் வருடத்தில் சீன நாட்டில் நகர்புற மக்கள் தொகை எண்ணிக்கையானது, 105 கோடியாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |