Categories
உலக செய்திகள்

அழிக்கப்பட்ட ஆர்ஸ்க் போர்க்கப்பல்…. வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்…. அதிரடி காட்டிய உக்ரைன் படையினர்….!!

ஆர்ஸ்க் போர் கப்பல் மீது உக்ரைன் ராணுவ படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் ஆர்ஸ்க் போர்க்கப்பல் தென் கிழக்கு உக்ரைனில் உள்ள பெர்டியன்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.  இந்தக் கப்பலின் மீது உக்ரைன் ராணுவ படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ஆர்ஸ்க் போர் கப்பல் எரிந்து சேதம் அடைந்து கவிழ்ந்து கிடப்பதை செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இதனை மேக்சர் டெக்னாலஜி நிறுவனமானது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போர்க்கப்பலில் பிடித்த தீ துறைமுகத்தில் இருந்த எரிபொருள் சேமிப்பு தொட்டிக்கும் பரவி எறிந்த காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

இந்த ஆர்ஸ்க் போர் கப்பல் ரஷ்ய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை தரையிறக்க பயன்படும் அலிகேட்டர் வகையை சேர்ந்தது ஆகும். மேலும் இது சுமார் 400 வீரர்களை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் கொண்டதாக கூறப்படுகின்றன. இதனையடுத்து கப்பல் தாக்கி அழிக்கப்பட்ட சமயத்தில் அதன் உள்ளே ரஷ்ய ராணுவப் படை வீரர்கள் இருந்தார்களா? அவர்களின் நிலை என்ன? என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |