போர் காரணமாக எல்லை கட்டுப்பாடுகள், போக்குவரத்து சோதனை உள்ளிட்ட காரணங்களாள் டிரக்குகள் செல்ல முடியாமல் இரண்டு நாட்களாக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் எல்லை கட்டுப்பாடுகள் மற்றும் போக்குவரத்து சோதனைகளில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக டிரக்குகள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உயுள்ளது.
இந்த நிலையில் போலந்து, பெலாரஸ் எல்லையில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் டிரக்குகள் அணிவகுத்து நிற்கின்றனர். இதனால் வணிக சேவையில் ஈடுபட்டுள்ள டிரக் டிரைவர்கள் 2 நாட்களாக எல்லையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் 1500 க்கும் மேற்பட்ட டிரக்குகள் அனுமதிக்காக நீண்ட வரிசையில் காத்து கொண்டிருகின்றனர்.