ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் ராணுவ நடவடிக்கை தாக்குதலால் தாங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம் என்ற கூற்றை முன்வைத்து பஞ்ஷீர் பள்ளத்தாக்கிலுள்ள தலிபான்களுக்கு எதிரான படைகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தலிபான்களால் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியாமல் இருந்துள்ளது. இதனால் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் முன்னாள் துணை அதிபரான அம்ரூல்லா அகமது மசூத் தலைமையில் தலிபான்களுக்கு எதிரான போராளிகளை உருவாக்கியுள்ளார்.
இந்த இரு குழுவினருக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வந்துள்ளது. இந்நிலையில் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கிலுள்ள தலிபான்களுக்கு எதிரான குழுவினர்கள் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள். இதற்கு தலிபான்களின் தாக்குதலினால் ஏற்பட்ட பெரும் இழப்பே காரணமாக அமைந்துள்ளது. மேலும் தலிபான்கள் தங்கள் படைகளை திரும்ப பெறுவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.