பிரான்சிலுள்ள மருத்துவமனை ஒன்று தங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு கட்டாயப்படுத்தியதால் அவர்கள் மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
பிரான்சில் Montelimar என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் மருத்துவமனை நிர்வாகம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது.
அதோடு மட்டுமின்றி தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் வேலையை விட்டு சென்று விட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பான கருத்தை எடுப்பது தங்களுடைய உரிமை என்றும் அதனை கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று சொல்வது தங்களுடைய உரிமைக்கு எதிரானது என்றும் ஊழியர்கள் கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து மருத்துவமனையில் பணிபுரியும் 200 மருத்துவர்களும் 1,500 செவிலியர்களும் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக குறித்த மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.