அர்ஜெண்டினாவின் தலைநகரில் பொதுமக்கள் பல குற்றச்சாட்டை முன்வைத்து பேஷன் ஷோக்களுக்கு எதிராக நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அர்ஜெண்டினாவின் தலைநகரில் பிரபல ஆடை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முன்பாக பலரும் பேஷன் ஷோக்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டை முன்வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அதாவது போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன ஆடைகளை அணிந்துகொண்டு நிறுவனத்தின் முன்பாக ஃபேஷன் ஷோ பாணியிலேயே நின்றுள்ளார்கள்.
மேலும் இவர்கள் ஃபேஷன் ஷோக்களுக்கான ஆடைகள் அதிகளவு பயன்படுத்த படாததால் அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரை நிறுவனத்தார்கள் வீணடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள்.