சூடானில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்களை ராணுவ வீரர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அந்நாட்டின் தலைநகர் உட்பட பல பகுதிகளில் பெண்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
சூடானை அந்நாட்டின் ராணுவத்தினர்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இவர்களது ஆதிக்கத்திற்கு எதிராக அந்நாட்டின் பொதுமக்கள் பலரும் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.
ஆனால் சூடான் ராணுவத்தினர்கள் வீதியில் இறங்கி போராடி வரும் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சூடானில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 13 பெண்களை இராணுவத்தினர்கள் தூக்கிச் சென்றுள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 பெண்களை தூக்கி சென்ற ராணுவத்தினர்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தலைநகர் கார்த்தோம் உட்பட பல பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.