Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இளம்பெண் மனதை மாற்றி கடத்தல்”…. போராட்டத்தில் மலைவாழ் மக்கள்…. வேலூரில் பரபரப்பு….!!

காணாமல் போன இளம்பெண்ணை மீட்டு தர வேண்டி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள வாழைப்பந்தல் பகுதியில் 16 வயதுள்ள இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் “கிருஷ்ணமூர்த்தி என்பவர் என் மகளின் மனதை மாற்றி கடத்தி வைத்திருப்பதாகவும், என் மகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்”.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன இளம்பெண்ணை வலைவீசி தேடி வந்துள்ளனர். ஆனால் இளம்பெண் கிடைக்காததால் பெற்றோர் உறவினர்கள் என  20க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு திரண்டு சென்றுள்ளனர். அப்போது மலைவாழ் மக்கள் காணாமல் போன இளம்பெண்ணை விரைவில் மீட்டுத் தரவேண்டும் என்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |