Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் இறங்கி போராட்டம்…. விவசாயிகளின் கோரிக்கை…. திருவாரூரில் பரபரப்பு….!!

வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு நாணலூர் கோரை ஆற்றிலிருந்து பிரியும் அகரம் களப்பால் பாசன வாய்க்கால் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று புதுபாண்டி ஆற்றில் கலக்கின்றது. இந்த வாய்க்கால் மூலம் 300 ஏக்கர் நிலத்தில் சாகுபடி நடைபெற்று வருகின்றது. இந்த வாய்க்காலை தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தற்போது மதகில் பராமரிப்பு இன்றி உடைப்பு ஏற்பட்டு பழுதடைந்து இருக்கின்றது. இதனால் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் வசதி கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். எனவே அகரம் களப்பால் வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும் என்றும் பழுதடைந்த மதகை சீரமைக்க வேண்டும் ஒன்றிய குழு உறுப்பினர் மாரியப்பன் தலைமையில் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி போராட்டத்தின் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் கூறியபோது அகரம் களப்பால் பாசன வாய்க்கால் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருவேலமரங்கள், பட்டுப் போன மூங்கில் மரங்கள், காட்டாமணக்கு செடிகள், மண்டி வாய்க்கால் தூர்ந்து இருக்கின்றது. மேலும் கஜா புயலில் சாய்ந்த மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் மேட்டூர் அணை தண்ணீர் வரும்போது குறுவை சாகுபடிக்கு போதுமான அளவு தண்ணீர் வராததால் பாதிக்கப்படுகிறது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மழை வெள்ள காலத்தில் வேதபுரம், வெங்கத்தான்குடி சிங்கமங்களம், நாராயணபுரம், நடுவகளப்பான், நல்லநாயகிபுரம் ஆகிய கிராமத்தின் தண்ணீர் முழுவதும் இந்த வாய்க்காலில் வந்துதான் வடிகிறது. எனவே சிறிதளவு மழை பெய்தால் கூட மழை நீர் வந்து சேர்த்து வடிய முடியாமல் தேங்கி நிற்கின்றது என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

அதன்பின் தண்ணீர் வடிவதற்கு பல நாட்கள் ஆவதால் 300 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் அனைத்தும் அழுகி விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகின்றது. எனவே அகரம் களப்பால் வாய்க்காலை தூர் வாரி சீரமைக்க வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நேரில் சென்று விவசாயிகள் மனு கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைதொடர்ந்து தற்போது மேட்டூர் அணை திறந்ததால் கால அவகாசம் இன்றி அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு அகரம் களப்பால் அய்யனார் கோவிலடியிலிருந்து புதுப்பாண்டி ஆறு வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் வடிகாலை மட்டுமாவது உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனை தவறும்பட்சத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |