Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்கிருந்து போக மாட்டோம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. கைது செய்த போலீஸ்….!!

சாலை வசதி வேண்டி சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்

தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோம்பை மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டி கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து சட்டமன்ற தேர்தலின் போது அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி செய்து கொடுக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் நேரில் சென்று அவர்களிடம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பின் தண்டுமாரியம்மன் கோவில் அருகில் இருந்து கோம்பை வரை உள்ள வனப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை வசதி வேண்டி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு நிறைவேறும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனிடையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தகவலறிந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் , காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனாலும் பொதுமக்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இவ்வாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 40 பெண்கள் உட்பட 26 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Categories

Tech |