Categories
உலக செய்திகள்

போராட்டக்காரர்களை குருவியைப் போல் சுட்டுத் தள்ளிய ராணுவ அரசு…114 பேர் உயிரிழந்த பரிதாபம் …!!!

மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களின் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் இருக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்ப ஆங் சான் சூச்சி அரசு வெற்றி பெற்றதை அடுத்து தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆட்சியை கவிழ்த்து பிப்ரவரி முதல் ராணுவம் ஆட்சியை  கைப்பற்றியது. இந்த ராணுவ ஆட்சிக்கு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பிப்ரவரி 2-வது வாரத்திலிருந்து நடந்து வரும் மக்களின்  போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ராணுவ அரசு  அடக்குமுறை என்ற பெயரில் கொடூரமான செயல்களை செய்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து ஆயுதப்படை தினத்தை கொண்டாடிய போது ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங்  ராணுவ ஆட்சியை  எதிர்ப்பவர்கள் அனைவரையும் தலையில் சுடுவோம் என்று கடுமையாக முறையில் மிரட்டியுள்ளார். அதை மீறி அந்நாட்டின்  மிகப்பெரிய நகரங்களான யாங்கூன் மாண்டலே போன்ற 40 இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் விதிகளில் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினர்.

மக்களால் அமைதியாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை தூண்டும் விதமாக ஆங்காங்கே தீ வைப்பு மற்றும் இராணுவ வீரர்கள் மக்களின் கூட்டத்தை கலைப்பதற்காக சிறிதும் இரக்கமில்லாமல் கண்மூடித்தனமாக பலரின் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.இதுவரை வரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 114 போராட்டக்காரர்களை குருவி சுடுவது போல் ராணுவ வீரர்கள் சுட்டுக் தள்ளியுள்ளனர்.

அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல இளைஞர்களும் சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆகையால்  சர்வதேச அளவில் மியான்மார் ராணுவத்தின் மீது பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அமெரிக்கா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து  போன்ற 12 நாடுகள்  மியன்மார் ராணுவ அடக்கு முறை கண்டித்து வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பும் ஐ.நா பொது சபையும் மியன்மார் ராணுவ ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 12நாடுகளின்  வெளியுறவு மந்திரிகளின் கூட்டறிக்கையில் மக்களைப் பாதுகாப்பதும் நாட்டின் அமைதியை உறுதி செய்வது மட்டுமே ராணுவ வீரர்களின் கடமையாகும் அதைத் தவிர்த்து சொந்த மக்களுக்கு தீங்கு விளைவிப்பது தவறாகும்.

மேலும் ராணுவ வீரர்கள் மக்கள் மீது நடத்தி வரும் கடுமையான  வன்முறையை நிறுத்தி அவர்கள் மீதுள்ள  மக்களின் மரியாதையையும் நம்பகத் தன்மையையும் மீட்டெடுக்க உறுதியாக செயல்பட வேண்டும் என்று மியன்மார் ராணுவ ஆட்சியிடம் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளனர்.  ஐரோப்பிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மியான்மார்  ராணுவ ஆட்சி கொண்டாடிய 76வது ஆயுதப்படை தினம் அவர்களுக்கு மிகப்பெரிய அவமான தினமாக நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசின்  செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ள அறிக்கையில் மக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு அவர்கள் சர்வதேச அளவில் பதில் அளிக்க வேண்டும் என்றும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இதனால் ஐ.நா அலுவலகம் சனிக்கிழமையன்று நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் திகிலடைந்துள்ளதால் இந்த முறைகேடான வன்முறையை ஆதரிக்கப் போவதில்லை என்றும் இதனை  முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |