போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க முயற்சிகள் நடப்பதாக அதிபர் டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்காவில் நேற்று 244 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் வரலாற்றில் அழிக்க முயற்சிப்பதாக கடுமையாக குற்றம்சாட்டினார். சமீப காலங்களாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் கவலை தரும் வகையில் இருப்பதாகவும் போராட்டங்கள் விளைவால் வன்முறை ஏற்படுகிறது.
மேலும் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்கள் மீது தாக்குதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது. இப்போராட்டங்கள் அமெரிக்காவின் அரசியல் நடைமுறையின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் இடதுசாரி கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் அமெரிக்காவின் கலாச்சாரத்தை அழிக்க முயற்சிகள் நடப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்